இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்து வெளியான தகவல்..!

நாட்டில் இன்று மாத்திரம் 20 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டவர்களில் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு பண்டாரநாயக்க பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும் உள்ளடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும், பண்டாரநாயக்க மாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவர் ஒருவரும், வெலிசறை கடற்படையைச் சேர்ந்த நான்கு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, மற்றுமொரு கடற்படை வீரர் மொனராகலைப் பகுதியில் வைத்தும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் 7 பேர்கொரோனா தொற்றில் இருந்து இன்று குணமடைந்துள்ளதாகவும் தேசிய தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாதொற்றுக்குள்ளாகி இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதுடன்,

315 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரஅமைச்சின் தொற்று நோய்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.