கொரோனா தொற்றின் தாக்கமானது உச்ச மட்டத்தில் உள்ளது- சுகாதார பணிப்பாளர்

கொரோனா வைரஸ் தொடர்பில் நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் படி, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உச்சகட்டத்தில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் குறித்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காவி்ட்டால் நிலைமை பாரதூரமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் அடையாளப்படுத்தப்பட்டதாகவும், அவர்களின் பெரும்பாலானோர் தற்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.