இலங்கையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதற்கான காரணம் வெளியானது!

இலங்கை முழுவதும் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று இரவு அரசாங்கம் திடீர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதற்கமைய, இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் நீண்ட வார இறுதி விடுமுறை தினம் வருகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை மே தினம் என்பதனாலும், மே தினம் என்பது அரச, வர்த்தக விடுமுறை தினம் என்பதனாலும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வாரமும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.