மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் குறித்து வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பிருள்ளனர்.

தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு இன்று முற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக காணப்படுகின்றது.

அத்துடன், 132 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனாவின் தாக்கம் காரணமாக இலங்கையில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.