உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள செய்தி

முகக்கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்லவெனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அடிக்கடி கைகளை கழுவ முடியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் இடைவெளியை பேண முடியாதவர்களுக்கே கட்டாயமாக முகக்கவசங்கள் அவசியமாகின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெடோஸ் எடனம் கிரேபியஸ் குறிப்பிட்டார்.

போதிய நீர் இல்லாதவர்கள் மற்றும் சன நெரிசலை தவிர்க்க முடியாதவர்களுக்கு முகக்கவசங்களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது, சுகாதார ஊழியர்களுக்கு முகமூடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகளின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, அமெரிக்க பாடகி லேடி காகா, உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கொவிட் 19 வைரஸ் தொற்று தொடர்பிலான பிரசார நடவடிக்கைகளை இம்மாதம் 18ஆ் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் டேவிட் பெக்கம், பொலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.