கொரோனா வைரஸின் தீவிரம்; சட்டமா அதிபர் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானம்.

சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து விசேட கடிதம் ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் நாயகம் சுமதி தர்மவர்தன, நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கொரோனா தொற்றாளருடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் குறித்து கண்டறிவதற்காக தேவையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இதனைக் கருத்திற் கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள வழக்குகளில் எதிர்வரும் தினங்களில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாமை குறித்து அவமானம் செலுத்துமாறு நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வழக்குகளை பொருத்தமான பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைப்பது குறித்து ஆராயுமாறும் நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.