எனது தந்தையை நல்லடக்கம் செய்ய உதவுங்கள் - ஒட்டுமொத்த முஸ்லிம்களிடமும் மகன் உருக்கமான வேண்டுகோள்.


கொழும்பில் நேற்று புதன்கிழமை 1 ஆம் திகதி ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ள தனது தந்தையை, இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய உதவும்படி, அவரது மகன் பயாஸ் மிகவும் உருக்கமான முறையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சற்றுமுன் தொலைபேசியில் உரையாடிய அவர், தற்போது எனது வாப்பாவின் ஜனாஸா ஐ.டீ.எச். வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் எரியூட்ட வேண்டுமென்கிறார்கள். அவர்கள் சுற்றுநிருபத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். நாங்கள் நல்லடக்கம் செய்ய வேண்டுமென்கிறோம்.

எனது தந்தையை நல்லடக்கம் செய்ய, யார் யாரினால் எல்லாம் உதவ முடியுமோ, அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். தயவுசெய்து எனது வாப்பாவை நல்லடக்கம் செய்ய உதவுங்கள்.

யா அல்லாஹ் வபாத்தானவரின் பாவங்களை மன்னித்து, அவருக்கு மேலான சுவனத்தை வழங்குவாயாக...!

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.