நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் யார்? சுகாதார பணிப்பாளர் விளக்கம்

இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார்.

“நேற்றைய தினம் மாத்திரம் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த 16 பேரில் 9 பேர் கடற்படையினர். அவர்கள் வெலிசர முகாம் மற்றும் வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.

அதற்கமைய கடற்படையினர் தொடர்ந்து கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர். எனினும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டமையே அதற்கு காரணமாகும்.

இதற்கு மேலதிகமாக தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அதே போல் கொழும்பு தாபரே மாவத்தையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் அவர் தாபர் மாவத்தையில் இல்லை. அதற்கு அருகில் உள்ள பிரதேசத்திலேயே உள்ளார். அதே போல் சுதுவெல்ல பிரதேசத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் நீண்ட காலமாக இருந்த 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறே நேற்றைய தினம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜாஎல சுதுவெல்ல பிரதேசத்தில் முதலாவது கொரோனா நோயாளி மார்ச் மாதம் 30ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.