பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பொதுத்தேர்தலை நடத்தும் திகதியை அறிவிக்காமல் தேர்தலை பிற்போடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குவிற்கு கிடையாது. ஆணைக்குழு பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24 (3) பிரிவிற்கு அமைய செயற்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பாதிப்பினால் அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பின் இந்நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்துள்ளன.

இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தையும் தற்போது எதிர்க்கொண்டுள்ளது.

2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் அரச கடன் சுமை 71 சதவீதமாக அதிகரித்ததுள்ளது. ரூபாவின் பெறுமதி 30 சதவீதாகவும் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறான நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அரச நிர்வாகத்திற்கும், தூரநோக்கு திட்டங்களுக்கும் அமையவே பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்தோம். ஆனால் அதற்கும் எதிர்க்கட்சியினர் ஆதரவு வழங்கவில்லை.

அரசியலமைப்பின் 150(3) பிரிவின் பிரகாரம் நிதி தொடர்பான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றது. இதனூடாகவே அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுகினறது. இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் அடையாளப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதற்கும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை வழங்குவதில் அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்தது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்று உலக நாடுகளின் நல்லபிப்ராயத்தை பெற்றுள்ளது.

நெருக்கடி நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஜனாதிபதி தலைமை தாங்கினார். சுகாதார சேவையாளர்களின் சேவைகளை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. முப்படையினரது பாதுகாப்பு நடவடிக்கைகள் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வழிவகுத்தது.

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சியினர் ஆரம்பத்தில் இருந்து தடைகளை ஏற்படுத்தினர்.

நெருக்கடி நிலையிலும் ஜனாதிபதியின் நிதி தொடர்பான அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு வெளியிட்ட வர்த்தமானியை மீளப்பெற்று பாராளுமன்றத்தை கூட்டுமாறும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்தரப்பினர் செயற்படுவதால் பல விளைவுகள் ஏற்பட்டுள்ளன. தேர்தலை தொடர்ந்து பிற்போடும் நிலையில் இருந்தே எதிர்தரப்பினர் செயற்படுகின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கம் 3 வருட காலமாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட்டது. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததன் பிறகே தேர்தல் ஆணைக்குழு உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை அறிவித்தது.

2017 ஆம் ஆண்டு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த கூடாது என்ற நோக்கில் மாகாண சபை தேர்தல் முறைமை பாராளுமன்ற முறைமைகளுக்கு முரணாக பெரும்பானமை ஆதரவு பெற்றுக் கொள்ளப்பட்டு தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட்டது. இதுவே மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளனமக்கு பிரதான காரணம்.


கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பொதுத்தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தி புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தை மே மாதம் கூட்ட வர்த்தமானி வெளியிட்டப்பட்டது. இவ்வாறான நிலையில் 10 நாட்களுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தல் நடத்தும் திகதி பிற்போடப்பட்டது. அறிவிக்கப்பட்ட தேர்தலை பிற்போடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.

1981 /1 இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24(3) அத்தியாயத்தின் பிரகாரம் பொதுத்தேர்தலை நடத்தும் திகதியை அறிவிக்கும் முழுப் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு காணப்படுகின்றது.

பொதுத்தேர்தலை நடத்தும் திகதியை அறிவிக்காமல் தேர்தலை பிற்போடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடையாது. தேர்தல் ஆணைக்குழு முதலில் தேர்தல் சட்டத்தின் 24 (3) பிரிவிற்கு அமைய செயற்பட வேண்டும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.