பாராளுமன்ற தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ள விடயம்....!

தேர்தல் ஆணைக்குழுவிற்குள் பேச வேண்டிய விடயங்கள், மற்றும் சமூகத்தில் பேசுபொருளாகும் விடயங்களை ஊடகங்களில் பகிரங்கப்படுத்துவது தேர்தல்கள் ஆணைக்குழு பின்பற்றும் நடைமுறை அல்ல வென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்,

அத்துடன் தற்போது தேர்தல் குறித்து தமது கருத்தை வெளியிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார், மேலும் பிற்போடப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஊடகங்களில் கருத்துக்கள் வௌியாகின்ற நிலையில், தேர்தலை பிற்போடவோ அல்லது நடத்துவதற்கோ தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் கொடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறும் தகவல்கள், தற்போதைய நிலைமைகள் அனைத்தையும் கருத்திற் கொண்டு தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு சார்பாகவே தாம் செயற்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.