யாருடன் பழகினோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் ! பொதுமக்களிடம் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் !

தாம் யாருடன் எல்லாம் பழகினோம் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். விஷேடமாக மேல் மாகாணத்தின் கொழும்பு களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் புத்தளம், கண்டி, யாழ். மாவட்டங்களில் உள்ளவர்கள் இக்காலப்பகுதியில் பழகியவர்கள் தொடர்பில் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவியுங்கள்.

நீங்கள் உண்மையான தகவல்களை வழங்கும் போது உங்களையும் உங்களை சுற்றி இருப்போரையும் காப்பாற்ற இலகுவாக இருக்கும். தயவு செய்து உண்மைகளை மறைக்காதீர்கள். என பொலிஸ் சட்ட பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் விஷேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.