கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த கூறிய பதில்!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு எதிர்காலத்திலும் முஸ்லிம் மக்களில் எவராவது உயிரிழக்க நேரிட்டால் சடலங்களைப் புதைப்பதா அல்லது எரிப்பதா என்ற விடயத்திற்கு தீர்வு காண்பதற்காக குழுவொன்றை அமைக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

அலரிமாளிகையில் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களை பிரதமர் இன்று சந்தித்தார்.

இதன்போது, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மருதானையில் கொரோனாவிற்கு பலியாகிய இரண்டு முஸ்லிம் நபர்களின் சடலங்கள் எதிர்ப்புக்களை மீறி தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம் தலைவர்கள் பிரதமரிடம் விசனம் வெளியிட்டனர்.

அதற்கு பதிலளித்த பிரதமர், இந்த விவகாரத்திற்கு தீர்வுகாண குழுவொன்றை அமைக்கவுள்ளதாக பதிலளித்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌஸி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.