மீண்டும் அமுலாகிறது ஊரடங்கு: சற்று முன்னர் வெளியான விசேட செய்தி...!

கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்பொது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அமுலில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அமுலில் காணப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.