சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ள விடயம்

குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பு ஊசிகளை வழங்கும் பணிகளை எதிர்காலத்தில் ஆரம்பிக்க உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைவான சுற்றுநிரூபம் நேற்றைய தினம் தம்மால் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில், ஊரடங்கு சட்டம் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறையில் தளர்த்தப்படும்.

அதன் பின்னர், மருத்துவமனைகளில் பணிகளுக்கு சில வரையறைகள் விதிக்கப்படும்.

குறிப்பாக குழந்தைகள் மருத்துவத்தின்போது, சமூக இடைவெளியை பேணுவதற்காக அதிகளவில் மருத்துவ சோதனை நடத்தப்படும் நாட்கள் அதிகரிக்குமாறு துறைசார் தரப்பினரிடம் கோரப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான மருத்துவ சோதனைக்காக தாய்மார்கள் மாத்திரம் மருத்துவமனைக்கு வருகை தருவது மிகவும் சிறந்தாகும்.

இதன்போது, குறித்த சமயத்தில் மருத்துவமனைகளில் இருப்போரின் எண்ணிக்கையை குறைந்தளவில் பேணுவதை தங்களால் தக்க வைத்துக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.