க.பொ.த. சாதாரண தர மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சின் தீர்மானம்

கல்விப்பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக விசேட தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த மாணவர்கள் வீடுகளில் இருந்து தமது கல்வியை முன்னெடுக்கும் போது, பாடத்திட்டங்களில் காணப்படும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ள உதவும் வகையில், இந்த விசேட தொலைபேசி சேவை செயல்படுத்தப்பட உள்ளது.

கல்வி அமைச்சு முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில், தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்கள் சிலவற்றுடன், தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் தாம் பயன்படுத்தும் எந்தவொரு தொலைபேசி வலையமைப்பில் இருந்தும் 1377 எனும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, தமது பிள்ளைகளுக்கு இந்த சேவையைப் பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சேவைக்காக எந்தவொரு கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்பதுடன், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.