இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேர் தொடர்பில் வெளியான தகவல்

இன்று இதுவரையில் 6 பேருக்கு புதிதாக கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் ஐந்து பேரும் கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளில் இன்று வரையில் 62 பேர் கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அவர்களில் 31 பேர் வரையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சுத்திகரிப்பு இடம்பெறுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தபகுதியைச் சேர்ந்த 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர், வெவ்வேறு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், இன்று அடையாளம் காணப்பட்ட 6 கொவிட்19 நோயாளிகளுடன், இலங்கையில அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 7 மரணங்கள் பதிவாகியுள்ளன. நோயாய் பீடிக்கப்பட்டவர்களில் 100 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக, சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதேநேரம், 203 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், 158 பேர் மருத்துவ விசாரணைகளின் வீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.