மேலும் 30 பேருக்கு கொரோனா.... அதிர்ந்து போயிலுள்ள இலங்கை மக்கள்....! விசேட அறிவித்தல்....!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மேலும் 30 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி இந்த தகவலினை உறுதிபடுத்தியுள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் நேற்றைய தினம் 30 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இதுவரை குறித்த முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஜா - எல சுதவெல்ல பிரதேசத்தில் சிலரை தனிமைப்படுத்தலுக்கு அழைத்து சென்ற வெலிசர கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியமையை தொடர்ந்து 60 பேருக்கு பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பொலநறுவை லங்காபுர பகுதியில் 12 கிராமங்களை சேர்ந்த 6000 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அநுராதபுரம் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி ஒருவர் மற்றும் அங்கிருக்கும் ஏனைவர்கள் பரிசேதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.