வெலிசர கடற்படை முகாமின் 30 சிப்பாய்களுக்கு கொரோனா..! எவ்வாறு ஏற்பட்டது தெரியுமா..?

கொரோனா காரணமாக நாள் ஒன்றில் அதிகூடிய நோயாளர்கள் நேற்றைய தினம் அடையாளங் காணப்பட்டனர்.

நேற்றைய தினம் மாத்திரம் 38 கொரோனா தொற்று உறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.

வெலிசர கடற்படை முகாமில் சேவையாற்றும் பொலன்னறுவை பகுதியை சேர்ந்த சிப்பாய் உள்ளிட்ட 30 சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வெலிசர கடற்படை சிப்பாயுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய சகலரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜா-எல - சுதுவெல்ல பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளுக்காக சென்ற போதே குறித்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.