வெலிசர முகாம் கடற்படையினர் 123 பேர் மத்திய மாகாணத்திற்கு விடுமுறையில் வந்துள்ளனர்.

வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் 123 கடற்படை வீரர்கள் விடுமுறையின் போது மத்திய மாகாணத் திற்கு வந்துள்ளதாக இனம் காணப்பட்டுள் ளதாகவும் அவர்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அர்ஜூன் திலகரத்ன தெரிவித்தார்.

பேராதனை வைத் தியசாலையில் நடந்த ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரி வித்ததாவது, மேற் படி 123 பேரில் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி யுள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

அவர்கள் ஐந்து பேரும் கொழும்பு ஜ.டி.எச். வைத்தியசா லையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதில் கண்டி மாவட்டத்திற்கு 77 பேரும் மாத்தளை மாவட்டத்திற்கு 34 பேரும், நுவரெலியா மாவட்டத்திற்கு 12 பேரும் விடுமுறையில் வருகை தந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.

அவர்களில் கண்டி

மாவட்டத்தில் 5 பேரும் மாத்தளை மாவட்டத்தில் ஒரு வரும் இதுவரை கொரோனா தொற் றுக்குள்ளாகி இனம் காணப்பட்டுள்ளனர்.

எனவே மத்திய மாகாணத்திலுள்ள கடற்படை வீரர்களது வதிவிடப் பிரதே சங்களில் வசிக்கும் யாரும் அச்சம் அடையத் தேவை யில்லை .

சுகாதார அதிகாரிகள் தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொண் டுள்ளனர்.

அவர்கள் சுற்று வட்டத்திலுள்ளவர்கள் அவர்களுடன் பழகிய வர்கள் போன்ற சகல விடயங்களும் கவனத் திற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றது.

மேற்படி கடற்படை அதிகாரிகள் சகலரும் தமது கடமையின் கார ணமாகவே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி யுள்ளதாகவும் எனவே அவர்கள் தொடாபாக அனுதாபத்துடன் நோக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் மத்திய மாகாணத்தில் மொத்தம் 178 பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.