நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா: தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று 17 பேர் அடையாளம் காணப்பட்டனர். 

இவர்களுள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உள்ளடங்கியுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துரைக்கையில் ராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 295 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 168 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொற்றுக்குள்ளான 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 7 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.