இன்று நள்ளிரவுடன் ரயில்வே பணிப்புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தொடருந்து இயந்திர சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

தொடருந்து இயந்திர சாரதிகள் சங்க பிரதான செயலாளர் இந்திக தொடாங்கொட இதனை தெரிவித்துள்ளார்.

தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் தொடருந்தினுள் அனுமதிக்கப்படுவதன் ஊடாக தொடருந்து இயந்திர சாரதிகளுக்கு தொடருந்து ஊடாக போதை பொருட்களை விநியோகிக்க முடியாதுள்ளதன் காரணமாக இந்த தொடருந்து போக்குவரத்தில் தாமதம் ஆகுவதாக கடந்த புதன் கிழமை அமைச்சர் விமல்வீரவன்ச கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் தொடருந்து சேவைகள் தாமதமாகின்றமை தொடர்பில் அமைச்சர் வீமல்வீரவன்ச தொடருந்து இயந்திர சாரதிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இது குறித்து தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என தொடரூந்து முகாமையாளர் டிலான் பெர்ணாடோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சுகவீன விடுமுறை போராட்டத்தில் இணைந்து கொள்ள போவதில்லை என சில தொடருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் வீமல்வீரவன்ச வெளியிட்ட கருத்து தொடர்பில் தமக்கு தெளிவுபடுத்துமாறு அவரிடம் கோரியுள்ளதாக குறித்த போராட்டத்தை கைவிடுமாறும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து எமது செய்தி சேவை வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.