மீண்டும் விசேட அறிவிப்பு - கடுமையான உத்தரவு பொது மக்களுக்கு....!

அனைத்து காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களுக்கு வீதியிலோ அல்லது குறுக்கு வீதிகளிலோ வீடுகளிலிருந்து வெளியேறி இருப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என பதில் காவல் துறை மா அதிபர் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறை ஊரடங்கு சட்டத்தின் உத்தரவிற்கு அமைய செயற்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பதில் காவல் துறைமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உடனடியாக அமுலுக்கு வரும் அரச மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மருந்தகங்களையம் மூடுமாறு பதில் காவல் துறை மா அதிபர் சீ . டீ . விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் காவல் துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன எமது செய்திபிரிவிற்கு தெரிவித்தார்.

இதற்கமைய மருந்துகனை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று பகிர்ந்தளிப்பது தொடர்பில் சிறப்பு சந்தை வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த சிறப்பு சந்தை வர்த்தக நிலையங்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்ய திறந்து வைக்கப்படுமாயின் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.