இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் 86 தொடருந்துகளின் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
தினமும் சேவையில் ஈடுபடும் அலுவலக புகையிரத சேவைகளும் இதில் உள்ளடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோவிட் பத்தொன்பது வைரஸ் பரவும் அபாயம் காரணமாக இன்று முதல் 20ஆம் திகதி வரை வெளியுறவுத்துறை அமைச்சின் தூதரக சேவைகள் பிரிவு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சேவைகளைப் பெற வரும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Post a Comment