கண்டியில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளர் ஐ.டி.எச் இற்கு மாற்றம்..!

மத்திய மாகாணத்தில் முதலாவது கொரோனா நோயாளர் இனங்காணப்பட்டுள்ளார்.

மத்திய மாகாணத்தில் முதலாவது கொவிட் 19 வைரஸ் தோற்று பரவிய ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்டவர் அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 15 ம் திகதி இந்தியாவிலிருந்து சென்னை வழியாக இலங்கை வந்தவர் என்றும் இவர் இந்தியாவிலிருந்து வந்த விடயம் தொடர்பாக எவருக்கும் அறிவிக்கவில்லை. என்றும் குறித்த நபர் தனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர் இன்று (28) கண்டி வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சென்ற பின்பே இவருக்கு கொவிட் 19 வைரஸ் பரவியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து குறித்த நபர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் இரு பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகம் படுவதாகவும் இது குறித்து மருத்துவ அறிக்கையினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவிய குறித்த நபர் யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது தொடர்பாக பொலிஸாரும் சுகாதார பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே கொரோனா கொவிட் 19 வைரஸினை இலங்கையில் கட்டுப்படுத்த வேண்டும் என நினைத்தால் அது பொது மக்கள் ஒத்துழைப்பின் மூலம் செய்ய முடியும் என்பதனை திரும்ப திரும்ப வலியுறுத்தியும் அதனை கவனத்தில் கொள்ளாது அலட்சியமாக இருப்பது கவலையளிக்கிறது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.