இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு சட்டம் நாடுமுழுவதும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த ஊரடங்கு சட்டத்தை 23ஆம் திகதியின் பின்னர் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாளையதினம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலாகின்ற காலப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனவே, காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள காலத்தில் மக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம், ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள காலப்பகுதியில், அத்தியாவசிய சேவைகளுக்கும், ஊடக பணிகளுக்கும் மாத்திரம் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படுகின்றது.
எனவே, அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அடையாள அட்டையை, ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிக்கும் விமான பயணிகள், தங்களின் விமான பயணச்சீட்டை, ஊரடங்கு சட்ட அனுமதிபத்திரமாக பயன்படுத்த முடியும் என காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
நேற்று முற்பகல் முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் திரண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பாகங்களின் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், எரிபொருளை நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில், தேவைக்கு மேலதிகமாக எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, எரிபொருள் குறித்து பொதுமக்கள் தேவையற்ற வகையில் அச்சமடைய வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடன் அடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதாக கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவுறுத்தியுள்ளமையினால், அடுத்தவாரம் முழுவதும் கையிறுப்பு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள காலப்பகுதியில், அதிவேக நெடுஞ்சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நோயாளர் காவுவண்டிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக, அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு கட்டண அறவீடு இன்றி அதிவேக நெடுஞ்சாலைகளை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என பெருந்தெருக்கள் அமைச்சர்
இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலாக்கத்திற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அனைத்து தொடருந்து சேவைகளும் நேற்று பிற்பகல் 3.30 முதல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
Post a Comment