நேற்றிரவு முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பதற்ற நிலைமை..!!

நீர்கொழும்பு - பெரியமுல்லை பகுதியிலுள்ள முஸ்லிம் உணவகம் ஒன்றில் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த குழுவொன்று அதன் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போது மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றிரவு 9.30 அளவில் 6 பேர் கொண்ட குழு குறித்த உணவகத்தில் மது அருந்த முற்பட்ட போது அதன் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து இரு தரப்புக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

இதன் போது அத்துமீறி நுழைந்த குழுவினர் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் மீது ஆயுதங்களினால் தாக்கி தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தமையை அடுத்து நீர்கொழும்பு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பணியாளர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

கெக்கிராவ - கனெவல்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.