இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா....!

இலங்கையில் மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இருந்து நாட்டுக்கு வருகை தந்து பொலன்னறுவை - கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு இலங்கையர்களும் ஜேர்மனிக்கு சுற்றுலா சென்று நாடு திரும்பிய ஒருவருமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் இரண்டு பேர் ஐ.டி.எச். மருத்துவமனையிலும் ஒருவர் பொலன்னறுவை மருத்துவமனையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.