பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

பல்கலைக்கழகங்களில் 2019 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கையேடுகளை இன்று (05) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புத்தக விற்பனை நிலையங்களில் மாணவர்களுக்கான கையேடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஆ​ணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

குறித்த கையேடுகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

கையேடுகளில் குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்ததன் பின்னர், மார்ச் 26 ஆம் திகதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்குமாறு பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

ONLINE APPLICATION

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.