கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் இலங்கையர் இத்தாலியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இத்தாலியின் ப்ரேஸியா பகுதியில் வசித்து வரும் 46 வயதான பெண் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட இந்த பெண் கடந்த 10 வருடங்களாக தனது கணவருடன் இத்தாலியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2036 ஆக காணப்படுகின்றதுடன் 52 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment