கடந்த முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பா, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து நாட்டை வந்தடைந்தவர்கள் அருகில் உள்ள காவற்துறை நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காவற்துறை நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் 119 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டளையை மீறுகின்றவர்களுக்கு எதிராக தொற்றுத் தடைகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment