உலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதிலொரு கட்டமாக இன்று விசேட பொது விடுமுறை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் வெளியில் செல்வதை தவிர்த்து அனைவரையும் வீட்டில் இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது போக்குவரத்தினை பயன்படுத்துவதையோ, பொது இடங்களில் கூடுவதையோ தவிர்க்குமாறு ஜனாதிபதி மக்களிடம் கேட்டுள்ளார்.
அவசர தேவையின் நிமித்தம் வீட்டு ஒருவர் மட்டும் வெளியில் சென்று வரலாம்.
வெளியே சென்று வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் அயலவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவல்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
Post a Comment