சற்று முன்னர் வெளியான செய்தி பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு...!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட பெறுபேறு மற்றும் நாடளாவிய ரீதியான அடைவு மட்டம் வெளியிடப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் டிசம்பர் 2ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.

இந்த பரீட்சைகள் 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்தது. பரீட்சைக்காக 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.