கொரோனா வைரஸ்: அரசாங்கத்தின் மற்றுமொரு அறிவிப்பு

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு பயணிகளை அழைத்து வருவதை தவிர்க்குமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. 

அதன்படி, நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 14 நாட்களுக்கு இதனை செயற்படுத்துமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று நாடுகளிலும் தற்போது சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இவ்வாறு அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரவேண்டாம் என அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.