கொரோனா வைரசினால் தாக்கப்பட்ட முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டார்.


கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி என கருதப்படும் நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வுகானின் குவானன் சந்தையில் இறால்களை விற்பனை செய்த 57 வயது பெண்மணியே முதல் நோயாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார் என வோல்ஸ்ரீட்ஜேர்னல் தெரிவித்துள்ளது.

அவரின் பெயர் வெய்குவாய்ஜியான் என ஜேர்னல் தெரிவித்துள்ளது.

அவர்டிசம்பர் பத்தாம் திகதி சந்தையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த வேளை உடல்நலம் பாதிக்கப்பட்டார் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

அவர் அதனை தொடர்ந்து சிறிய உள்ளுர் மருத்துவரிடம் சென்ற பின்னர் தனது பகுதிக்கு சென்று நோயை பரப்பினார் என ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது.

நான் சிறிது களைப்பாக உணர்ந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஓவ்வொரு குளிர்காலத்திலும் நான் காய்ச்சலால் பாதிப்படைவது வழமை இதுவும் அதனைபோனதொன்று என நினைத்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஒரு வாரத்தின் பின்னர் அந்த பெண் மருத்துவமனையில் கொரோனா வைரசின் முதல்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

டிசம்பர் 11 ம் திகதி உள்ளுர் மருத்துவர் ஒருவரிடம் சென்று ஊசிபோட்டுக்கொண்ட அவர் வுகானின் இலெவென்த் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவர்களால் எனக்கு என்ன நோய் என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை அவர்கள் மருந்துகளை தந்தனர் ஆனால் அதனால் பயன் இருக்கவில்லை நான் மீண்டும் ஊசிகளிற்காக திரும்பி வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் எனது நிலைமை மோசமடைந்தது என்னால் எழுந்து நிற்பதற்கான சக்தி கூடயிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக டிசம்பர் 16 ம் திகதி நான் வுகான் யூனியன் மருத்துவமனைக்கு சென்றேன் மருத்துவ பரிசோதனையின் பின்னர் மருத்துவர் எனக்கு மோசமான நோய் எனவும் ஏற்கனவே பலர் இந்த நோய் அறிகுறியுடன் வந்துள்ளதாகவும் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் டிசம்பர் இறுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் பின்னர் ஜனவரியில் குணமடைந்துள்ளார், வுகானின் கழிவறையிலிருந்தே தனக்கு வைரஸ் பரவியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

வெய்யுடன் சேர்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்களும் அவரது குடும்பத்தவர்கள் உறவினர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா அரசாங்கம் ஜனவரி ஆரம்பம் வரை நோய் பரவியை ஏற்றுக்கொள்ளவில்லை அவ்வாறு முன்கூட்டியே ஏற்றுக்கொண்டிருந்தால் பலரை காப்பாற்ற முடிந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 இல் நோய் தொற்றிற்குள்ளான 266 பேரை சீனா அடையாளம் கண்டுள்ளது என தெரிவித்துள்ள சௌத் சீனா மோர்னிங் போஸ்ட் வெய் குனான் சந்தையை சேர்ந்த முதலாவது நோயாளியாகயிருக்ககூடும் ஆனால் வுகானில் முதலாவதாக பாதிக்கப்பட்ட நபர் யார் என்பது மர்மமாகவே உள்ளது என தெரிவித்துள்ளது.

முதலாவது நோயாளியை அடையாளம் காணமுடிந்தால் அது வைரசின் ஆரம்பத்தினை அறிவதற்கு உதவும் என விஞஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வுகான் மருத்துவமனையின் அறிக்கையொன்று வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் இந்த பெண்மணியும் ஒருவர் என தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.