மாஸ்க் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள விசேட செய்தி...!

கொரோனா தொற்றுக்குள்ளாகாத சாதாரண மக்கள் வாய் மற்றும் மூக்கினை மறைக்கும் கவசம் கொண்டு மறைக்க தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜா சிங்க தெரிவித்துள்ளார்.

பதில் காவல் துறைமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என தன்னை தானே சந்தேகிப்பவர்களும், அவர்களுடன் நெருங்கி பழகிய உறவினர்கள் நண்பர்களும், நோயாளர்களை பராமரிக்கும் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், மற்றும் சுவாச நோய் குணங்கள் காணப்படும் நபர்களும் முக கவசம் அணிய முடியும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் முக கவசம் அணியத்தேவையில்லை என்பதோடு, பயன்படுத்தப்பட்ட முககவசங்களை பல்வேறு இடங்களில் கழற்றி போடுவதனால் நோய் தொற்றும் அளவு அதிகரிக்கும் எனவும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாதாரண மக்கள் முகக்கவசம் அணியாமை தவறாகும் என சுட்டிக்காட்டி அவர்களை எந்த விதத்திலும் தண்டிக்க வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க பதில் காவல் துறை மா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு குறிப்பிடுகையில்... 


கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்ப்பட்டவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படுபவர் மாத்திரம் வாய்களை மறைப்பதற்கான கவசங்களை அணிந்திருத்தல் வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.