பொதுமக்களுக்கு ஓர் சந்தர்ப்பம்..!

பழைய நாடாளுமன்றமாகிய தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தை எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 14 முதல் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் முற்பகல் 10 மணி முதல்இ பிற்பகல் 4.00 மணி வரை பழைய நாடாளுமன்ற கட்டடத்தை பொதுமக்களுக்கு பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.

பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) எனும் பெயருக்கு வேண்டுகோள் கடிதமொன்றை 011-2441685 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அனுப்பிவைப்பதன் ஊடாக அல்லது 011-2354354 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பார்வையிடுவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம்.

பழைய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியானது பழைய கட்டட நிர்மாண முறைமைகளில் ஐந்தில் ஒன்றான 'அயானியானு முறைமைக்கு' ஏற்ப 82 ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டது.

அதன் முன் தோற்றம் எதென்சில் உள்ள எக்ரோபொலிஷ் மலையில் 'எதினா' என்ற கிரேக்க தேவதைக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரதான தேவாலயமான 'பாதினன்' கட்டடத் தொகுதியை ஒத்ததாக காணப்படுகின்றது

ஹேபட் ஸ்டென்லி ஆளுநர் மூலம் 1930 ஜனவரி மாதம் 29ஆம் திகதி அரசியலமைப்பு சபையாக இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சட்டத்துறையில் பின்னர் இடம்பெற்ற பெயர் மாற்றத்துடன் அது அரச அமைச்சர்கள் சபைஇ உப அமைச்சர்கள் சபை தேசிய அரசாங்க சபை மற்றும் இலங்கை நாடாளுமன்றம் என்ற பெயர்களின் மூலம் வரலாற்றில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடாளுமன்றம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் இந்த புராதன கட்டடம் 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகமாக பெயரிடப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.