கொரோனா வைரஸ்: டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு......!

கொவிட் 19 தொற்று வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றை தடுப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய அவசரகால நிவாரண நிதியாக 50 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது சுகாதார சேவையை வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்தும் மற்றும் சோதனையை விரைவுபடுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை ஆயிரத்து 701 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 40 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தொற்றினை தடுப்பதற்காக அமெரிக்காவில் பல மாநிலங்களில் பாரியளவான கூட்டங்களுக்கும் விளையாட்டு நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.