தற்காலிகமாக நீக்கப்படுகிறது ஊரடங்கு உத்தரவு

புத்தளம் மாவட்டத்திற்கும், கொச்சிக்கடை காவல்துறை அதிகார பகுதிக்கும் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 8 மணி முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையேற்கும் நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர், மறு அறிவித்தல் வரை குறித்த பகுதியில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக புத்தளம் மாவட்டத்திற்கும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பிரதேசத்துக்கும் நேற்று மாலை 4.30 முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சிலாபம், காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும், மாரவில, மாதம்பே, கொஸ்வத்தை, தங்கொட்டுவ மற்றும் ஆராச்சிகட்டு பகுதிகளுக்கு இந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

அதேபோன்று முந்தளம், உடப்பு, கற்பிட்டி, நவகத்தேகம, பள்ளம, கருவலகஸ்வெவ, ஆணமடு, வன்னாத்துவில்லு, சாலியவெவ, உள்ளிட்ட காவல்துறை பிரிவுகளுக்கும் இந்த ஊரடங்கு சட்டம் அமுலாகிறது.

இதுதவிர, நீர்கொழும்பின் கொச்சிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.