கொரோனா வைரஸை தடுக்க உலக வங்கியின் அதிரடி தீர்மானம்

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க உலக வங்கி தீர்மானித்துள்ளது.

குறித்த உதவித் தொகையின் பெரும்பாலான பகுதி அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளை பெறுவதற்கு இந்த பணம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளதோடு 122 பேர் குறித்த வைரஸ் பரவலுக்கு உள்ளாகியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.