போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பா..? மருத்துவ அறிக்கை வெளியானது

உடல்நலக்குறைவால் அவதியுற்று வரும் போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

83 வயதுடைய போப் பிரான்சிசுக்கு அண்மையில் காய்ச்சலுடனான உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக இத்தாலிய ஊடகமொன்றை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிடப்பட்டிருந்தன.

இதனை அடுத்து, அவரின் திட்டமிடப்பட்டிருந்த சில நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, 2 ஆயிரத்து 36 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 52 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், பாப்பரசருக்கு ஏற்பட்ட காய்ச்சல் அறிகுறியை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.