ஜும்ஆ பள்ளிவாசலின் கட்டிடநிதி, உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் ஜும்ஆ பள்ளிவாசலின் கட்டிட நிதிக்கான உண்டியல் இனந்தெரியாத ஒருவரினால் நேற்றிரவு(28) உடைக்கப்பட்டு அதிலிருந்த ஸ பணம் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பள்ளிவாசல் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை வெளியே தூக்கிச் சென்று இரும்புக் கம்பியால் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டதையடுத்து, பொலிஸார் பள்ளிவாசலில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கேமரா காணொலிகளை பார்த்த போது இனந்தெரியாத நபரொருவர் உண்டியலை உடைத்து திருடியமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.