ஐவேளை தொழுகைகள் உட்பட மஸ்ஜித்களில் அனைத்து தொழுகைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தவும் - ACJU

கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உலக சுகாதார ஸ்தாபனமும், இலங்கை சுகாதார அமைச்சும் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மக்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற வகையில் மஸ்ஜித்களில் ஜுமுஆ, ஐவேளை ஜமாஅத்தொழுகைகள் உட்பட ஏனைய எல்லா வகையான ஒன்று கூடல்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய அரச ஸ்தாபனங்களினதும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினதும் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், அதனை
அமுல்படுத்துவதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் கண்டிப்போடு நடந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கிறது.

பொது செயலாளர்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா
15.03.2020

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.