இலங்கையில் 7 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ்? - பதுளை வைத்தியசாலையில் அனுமதி

கொரியாவில் இருந்து இலங்கை வந்தவர்களில் சிறு குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகத்தில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழந்தை நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த இந்த குழந்தையின் பெற்றோர் கொரியாவில் தங்கியிருந்தனர். அங்கு கொரோனா தொற்று பரவியதனை தொடர்ந்து இந்த குடும்பத்தினர் நாடு திரும்பியுள்ளனர்.

எனினும் இலங்கை வந்த பின்னர் அவர்களிடம் எவ்வித உரிய சோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 7 மாத குழந்தையிடம் கொரோனா தொற்றின் அறிகுறிகள் காணப்படுவதாகவும், அதனை உறுதி செய்ய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் வைத்தியசாலையின் விசேட பிரிவின் இலக்கம் 24 அறையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.