கொரோனா வைரஸ்: இன்று முதல் 3 நாட்களுக்கு பொது விடுமுறை.

இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை முக்கிய துறைகளை தவிர ஏனைய சகல அரச சேவையாளர்களுக்கும் விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலங்கள் என்பவற்றில் சேவையாற்றும் அரச சேவையாளர்களுக்கு இந்த விடுமுறை செல்லுப்படியாது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுதவிர ஏனைய அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விடுமுறை தனியார் துறையிருக்கும் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டினுள் பரவிச் செல்லும் கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.