இலங்கையில் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் - 19 தொற்று பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 13 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 தனிமைப்படுத்தல் மையங்களில் 2 ஆயிரத்து 738 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 30 பேர் வெளிநாட்டவர்களாவர்.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையினால் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களிலும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளிலும் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
பொது சுகாதார பரிசோதகர்களும், பிரதேச சுகாதார அதிகாரிகளும் இந்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
முந்தல் காவற்துறையினரால் கடந்த 8 ஆம் தி;கதி வாகன விபத்து தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கொடை தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதன்காரணமாக சந்தேகநபர் தடுத்துவைக்கப்பட்டிருந்த முந்தல் காவற்துறை மற்றும் நீதிமன்ற கட்டடங்கள் என்பன பிரதேச பொதுசுகாதார பிரிவினால் கிருமி தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றியிருந்த போதும் அதனை வெளி;ப்படுத்தாமல் ராகமை மருத்துவமனையில் மாரடைப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நபர் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண, குறித்த நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவர,; தங்குமிட விடுதி பணியாளர்கள், அருகில் இருந்த நோயாளர்கள் என அணைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
அந்த தங்குமிட விடுதியில் இருந்த நோயாளர்களுக்கு கூட வைரஸ் தொற்று தொடர்பான அவதான மிக்க நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்றைய தினம் குறித்த நபருக்கு எதிராக வத்தளை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் அத்துடன் ஏனையவர்களுக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்புபட்டுள்ள 24 மருத்துவமனை பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனையின் பேரில் நேற்று கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த நோய்த்தொற்றானது எல்லா இடத்திலும் பரவி உள்ளது என்ற விடயம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், நோய் பரவும் அபாயம் நாட்டில் உள்ளது என்பதை கூறிகொள்வதுடன் குறித்த தரப்பினருடன் தொடர்புகளை கொண்டிராமல் சமூகத்தில் உள்ள பெரும்பாலோனோருக்கு இந்த நோய் தொற்று ஏற்படவில்லை என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
Post a Comment