இத்தாலி நாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் இருவர் அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சற்று முன்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவருக்கும் காய்ச்சல் மற்றும் இருமல் காணப்பட்டமையினால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காய்ச்சல் மற்றும் இருமலுடன் வௌிநாடுகளிலிருந்து வருகைதந்த மேலும் நால்வர் கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
Post a Comment