காய்ச்சல் மற்றும் இருமல் நோய் அறிகுறிகளுடன் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்ட இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கைர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் உயிரியல் மாதிரிகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி செய்த பின்னர் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் மேலும் 7 பேர் காலி - கராபிட்டிய போதனா மருத்துவமனையிலும், குருநாகல் போதனா மருத்துவமனையிலும் கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய மருத்துவனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொவிட் 19 தொற்று சந்தேகத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மருத்து கண்காணிப்பின் கீழ் 9 உள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதில் ஒருவர் வெளிநாட்டவர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment