அச்சமடைய தொடங்கிய உலக நாடுகள்..!!

கடந்த வருடம் இறுதியில் சீனா நாட்டில் வூஹான் மாகாணத்தில் இருந்து தொடங்கிய உயிர் கொல்லி வைரஸான கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

சீனா தேசம் மட்டுமல்லாது ஜப்பான், தென்கொரியா, இந்தியா, ஈரான் , இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இது பரவியுள்ளது.

இந்நிலையில், ஈரானில் கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 61 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த உயிரிப்பு எண்ணிக்கை மத்திய கிழக்கு நாடுகளில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க, அங்குள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தற்போது அச்சமடையத் தொடங்கியுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.