கொரோனா வைரஸின் தாக்கம்; சவூதி அரேபியாவின் திடீர் அறிவிப்பு

சவூதி அரேபியாவிற்கு வரும் உம்ரா யாத்திரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு செல்ல தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் வெளியுறவு அமைச்சினால் இது தொடர்பில் அறிக்கையொன்று வெயிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

சவூதியில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கதிலேயே உம்ரா யாத்திரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு செல்வதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகளாவிய ரீதியில் மிக வேகமாக பரவிவருவதை அடுத்தே சர்வதேச நாடுகள் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றன.

இதன் காரணமாகாவே இவ்வாறு மக்கா மற்றும் மதீனாவிற்கு வருகைதரும் யாத்திரீகர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இச் செயற்பாடு தற்காலிகமானது. மீண்டும் உம்ரா யாத்திரீகர்களை மக்கா மற்றும் மதீனாவுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுமென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நாடுகளில் இருந்து சவுதிக்கு சுற்றூலா மேற்கொள்வோருக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு , சவுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்ளுக்கும் அங்கு தடை விதிக்கபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் தற்காலிகமாக செயற்படுத்தப்படவுள்ளதுடன், நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் மீண்டும் நடவடிக்கைள் அனைத்தும் நடைமுறைக்குவருமென சவூதி அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.