வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
எனினும் அவர்களில் தங்கியுள்ளோரின் சமூக பாதுகாப்புக்கான தொகையை சேமிக்க முடியாதுள்ளதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்பொழுது ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள நிலையில் நாட்டிற்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் முக்கிய மூல வளமாக வெளிநாட்டு பணியாளர்கள் திகழ்கின்றனர்.
அவர்கள் அவ்வாறு இருந்த போதிலும் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் அவர்களில் தங்கியுள்ளோரின் சமூக பாதுகாப்புக்காக ஏதேனும் தொகையை சேமிப்பதற்கு முடியாதுள்ளது.
இதன் காரணமாக அவர்களுக்கு ஓய்வூதிய வயதை எட்டிய பின்னர் பொருளாதார சிரமங்களை எதிர்கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்குத் தீர்வாக 'சௌபாக்கிய தொலைநோக்கு' என்ற தேசிய கொள்கையின் மூலம் வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களுக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய ஓய்வூதிய கொடுப்பனவு முறையை ஆரம்பிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
Post a Comment